×

3 நாடுகள் சுற்றுப்பயணம் துவங்கினார் ஜனாதிபதி முர்மு

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு, மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 நாடுகள் சுற்று பயணத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு டெல்லியில் இருந்து 3 நாடுகள் அரசு முறை பயணமாக நேற்று வெளிநாடு புறப்பட்டு சென்றார். பயணத்தின் முதல் கட்டமாக, இன்று (ஜூலை 20) அவர் மால்டோவா நாட்டிற்குச் செல்கிறார்.

மால்டோவாவில் அந்த நாட்டின் அதிபர் மையா சாந்துவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அதனைத் தொடர்ந்து, நாளை(21ம் தேதி), நாளை மறுநாள்(22ம் தேதி) வடக்கு மாசிடோனியாவில் சுற்று பயணம் செய்கிறார். அந்த நாட்டின் அதிபர் சில்ஜனவ்ஸ்கா தவ்கோவா, பிரதமர் ஹிறிஸ்டிஜன் மிகோஸ்கி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அதன் பின் 23ம் தேதி ருமேனியாவிற்கு முர்மு செல்கிறார்.

அங்கு அந்த நாட்டின் அதிபர் நிகுசர் தன், இடைக்கால பிரதமர் இலி போலோஜன் ஆகியோரை சந்தித்து பேசுவார். இந்திய ஜனாதிபதி ஒருவர் மால்டோவா, வடக்கு மாசிடோனியா, ருமேனியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஜூலை 25ம் தேதி சுற்று பயணத்தை முடித்து நாடு திரும்புவார் என ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags : President Murmu ,New Delhi ,President ,Draupadi Murmu ,Moldova ,North Macedonia ,Romania ,Delhi ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...