திருவள்ளூர், திருத்தணி தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம்: இன்று நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மேற்கு மாவட்டபொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனை ஆதரித்து திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் ஏகேஎன் திருமண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் எனது தலைமையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் முன்னிலையில் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 12.15 மணியளவில் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளார்.

இதேபோல் திருத்தணி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.சந்திரன் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து மாலை 3 மணியளவில் திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்க உள்ளார். எனவே திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மூத்த முன்னோடிகள் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு திருத்தணி எம்.பூபதி கூறியுள்ளார்.

Related Stories:

>