×

கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய கவுண்டம்பாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர்

கோவை, மார்ச் 15: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில், போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன், நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் கோவை தொகுதி எம்.பி. பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூ., கோவை மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவரும், கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார்.

இதுதவிர, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்புசாமி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் மகேஷ்குமார், மாநில நிர்வாகி பச்சைமுத்து, இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சுந்தரம், கொ.ம.தே.க மாவட்ட செயலாளர் குழந்தைவேல், பிரேம், தனபால் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கோவை மண்டல செயலாளர் சுசி. கலையரசன், கனி கண்ணன், சித்தார்த்தன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

Tags : DMK ,Countampalayam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்