×

ஆரணியில் அசைவ உணவகத்தில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல் நலக்குறைவு

திருவண்ணாமலை: ஆரணியில் அசைவ உணவகத்தில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல் நலக்குறைவானது. அம்மன் கோயில் விழாவுக்கு வந்த இரு குடும்பத்தினர் வேலூர் சாலையில் உள்ள குல்லா பாய் உணவகத்தில் உணவருந்தினர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். துரைராஜ், லாரன்ஸ் ஆகிய இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Arani ,Tiruvannamalai ,Amman temple festival ,Kulla Bhai ,Vellore Road ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து