×

தேர்தல் இலவசங்களுக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பு குறித்து கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மனுதாரரான வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் ஒரு முறையீட்டை வைத்தார். அதில், \”தேர்தல் இலவசங்களுக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கானது நீண்ட நாளாக நிலுவையில் இருக்கிறது. எனவே வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும். மேலும் இலவசங்கள் அறிவிப்பு குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிடுவது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்மனுதார்களும் ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து அரசியல் கட்சிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,\\” இந்த விவகாரத்தில் குழு அமைத்து ஆய்வு செய்ய எந்தவித எதிர்ப்பும் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கை அனைத்தையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் உடனடியாக முடிவெடுக்க முடியாது. இருப்பினும் தற்போது முக்கியமான வழக்குகள் பல நிலுவையில் உள்ளது. தேர்தல் இலவசங்களுக்கு தடை கேட்ட வழக்கை விசாரிப்பது தொடர்பாக பின்னர் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.

Tags : Supreme Court ,New Delhi ,Union government ,Ashwini Upadhyay ,Supreme Court… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...