×

நன்கொடை திருட்டு வழக்கு; பத்ரிநாத் கோயில் முன்னாள் அதிகாரி கைது: சிசிடிவி காட்சிகளில் சிக்கினார்

 

* சிறப்பு விசாரணைக்குழு அதிரடி

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலைப்போல் உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் கோயில் காணிக்கையும் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. மேலும் பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டியும் இந்த புகார் பற்றி விசாரணை நடத்தியது. அப்போது கோயில் முன்னாள் அதிகாரி ராஜேந்திர சவுகான் உண்டியல் திருட்டு செயலில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று ராஜேந்திர சவுகான் சிறப்பு விசாரணைக்குழு முன்பு ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் சுமார் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதற்குப்பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

ேமலும் பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டி தயாரித்த 18 பக்க உள்விசாரணை அறிக்கையை சிறப்பு விசாரணைக்குழு பெற்ற மறுநாளே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளையில், புதிய சிசிடிவி காட்சிகள் மூலம் இவ்வழக்கில் மேலும் சில சந்தேக நபர்களைப் புலனாய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அந்தக் காட்சிகளின் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில், சிறப்புப் புலனாய்வுக் குழு, பத்ரிநாத் கோவில் தலைமை நிர்வாக அதிகாரி சோகன் சிங் ரங்கட் மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் அதுல் திம்ரி ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. தினசரி நன்கொடைகள் எவ்வாறு கையாளப்பட்டன என்பதைக் கண்காணிக்க, புலனாய்வாளர்கள் கோவிலின் சிசிடிவி கட்டுப்பாட்டு அறையிலிருந்து செயல்பாட்டுப் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Badrinath temple ,New Delhi ,Uttarakhand ,Ayodhya Ram temple ,Badrinath-Kedarnath Temple Committee ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...