×

திருச்சுழி அருகே கோயிலில் வருடாபிஷேகம்

திருச்சுழி, மார்ச் 15: திருச்சுழி அருகே உள்ள கல்லுமடம் முனியாண்டி கோயிலில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருச்சுழி அருகே கல்லுமடம் கிராமத்தில் ஸ்ரீ முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. இங்கு புதிதாக மாரியம்மன் சிலை நிறுவப்பட்டு, கடந்த ஓராண்டுக்கு முன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், முனியாண்டி கோவிலில் நேற்று வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 10 நாட்களாக பக்தர்கள் விரதமிருந்தனர். வருடாபிஷேகத்தை முன்னிட்டு பல பிரசித்தி பெற்ற ஸ்தலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மேலும் பூர்ணாகதி, சதுர்வேதம், திருமுறை ஆசிர்வாதம் ஆகிய யாகங்கள் நடத்தப்பட்டன. இதை தொடர்ந்து உச்சிகால பூஜையில் மஞ்சள், பால், தேனீர் உள்பட 18 அபிஷேகங்கள் செய்து ஸ்ரீ முனியாண்டி, மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்துச் சென்றனர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Annual Blessing ,Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....