×

ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்குகின்றன. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனரின் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் கோயில் நடையை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து 18ம் படிக்குக் கீழே உள்ள ஆழியில் நெருப்பு ஏற்றப்பட்டது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கும்.

 

Tags : Sabarimala ,Aadi ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappa temple ,Thantri Kandhar Mahesh Mohan ,Melsanthi Prasad ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...