×

மேகதாது அணை முயற்சிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மேகதாது அணை முயற்சிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்க உரத்துக் குரல் எழுப்புவர்கள் என லண்டனில் இருந்து திமுக எம்பிக்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது சமூக வலைதள பதிவில்:
நாடாளுமன்ற மழைகால குறித்த கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:

மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.

ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்! என பதிவிட்டுள்ளார்.

Tags : Dimuka ,Parliament ,Megadhat ,Mu K. Stalin ,CHENNAI ,PRESIDENT ,MUKA ,MEGADATHU DAM ,K. Stalin ,London ,Tamil Nadu ,Kaviri ,
× RELATED உள்கட்டமைப்பு வசதி முழுமையடையாத...