×

குலதெய்வ கோயிலுக்கு சென்று திரும்பியபோது தம்பதியை தாக்கி 26 பவுன் சங்கிலி பறிப்பு மதுரை அருகே பரபரப்பு


மதுரை, மார்ச் 15: மதுரை அருகே, குலதெய்வம் கோயிலுக்குச் சென்றுவிட்டு, டூவீலரில் திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவியை தாக்கி 26 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை சிம்மக்கல் திருமலைராயர் படித்துறை, தைக்கால் 1வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (51). இவரது மனைவி செல்வி (43). இவர்கள் குழந்தையுடன் செக்கானூரணி அருகே உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சாமிகும்பிடச் சென்றனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு மதுரை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, இவர்களை பின்தொடர்ந்து டூவீலரில் அடையாளம் தெரியாத இருநபர்கள் வந்துகொண்டிருந்தனர். தேனி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி எதிர்புறம், பின்னால் டூவீலரில் வந்தவர்கள் திடீரென் பாண்டியராஜனின் டூவீலரை மறித்து நிறுத்தினர்.

 இதை எதிர்பாராத பாண்டியராஜன் தனது டூவீலரை நிறுத்த முயன்றார். அதற்குள் மர்ம நபர்கள், பாண்டியராஜன் மனைவியின் கழுத்தில் கிடந்த 20 பவுன் தாலிச்சங்கிலி மற்றும் 6 பவுன் தங்கச்சங்கிலி என 26 பவுன் எடையுள்ள இரண்டு செயின்களை பறித்தனர். அப்போது, கணவன், மனைவி இருவரும் வழிப்பறி நபர்களுடன் போராடினர். ஆனால், அவர்கள் அடித்து கீழே தள்ளப்பட்டனர். இதில் கணவன் மனைவி இருவரும் நிலைகுலைந்தனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலிகளை பறித்தக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். வழிப்பறி நபர்கள் தாக்கியதில், ெசல்விக்கு முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. இது குறித்து பாண்டியராஜன் கொடுத்த புகாரின்பேரில், செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Tags : Kuladeyva temple ,Madurai ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...