×

புகாரை போலீஸ் வாங்க மறுத்ததால் விவசாயி தற்கொலை: எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

 

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே மணலி கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ் (43). விவசாயி. இவரது மனைவி கடந்த 12ம்தேதி மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்றதால் அவரை கண்டுபிடித்து தருமாறு சுரேஷ் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க நேற்றுமுன்தினம் சென்றார். அப்போது அங்கு இருந்த தனிப்பிரிவு எஸ்எஸ்ஐ செல்வகுமார் (54), தற்போது இன்ஸ்பெக்டர் எல்லாம் ஸ்டேஷனில் இல்லை. மறுநாள் வந்து புகார் தர கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சுரேஷ், தனது வீட்டின் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், புகாரை பெற மறுத்த எஸ்எஸ்ஐ செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tiruvarur ,Suresh ,Manali ,Thiruthuraipoondi ,station ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து