×

சமூக நீதித்துறை விடுதிகளில் உணவின் தரத்தை உறுதி செய்ய வாட்ஸ்அப்பில் பதிவிட உத்தரவு

 

சென்னை: சமூக நீதித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு மாணவர் விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படவில்லை, சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், உணவு தரத்தை நேரடியாக கண்காணித்து குறைகளை சரிசெய்யும் நோக்கில் சமூக நீதித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாணவர் விடுதிகளில் தினமும் காலை, மதியம், இரவு என 3 வேளைகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை புகைப்படம் எடுத்து, அதனை துறை அதிகாரிகள் உருவாக்கியுள்ள வாட்ஸ் அப் குழுவில் உடனடியாக பதிவேற்ற வேண்டும் என்று விடுதி காப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Social Justice Department ,WhatsApp ,Chennai ,Tamil Nadu ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து