எலச்சிப்பாளையம் சிபிஎம் அலுவலகத்தில் ஆதரவு திரட்டிய மூர்த்தி எம்எல்ஏ

திருச்செங்கோடு, மார்ச் 14: பரமத்தி வேலூர் தொகுதியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான மூர்த்தி எம்எல்ஏ, திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து, நேற்று அவர் எலச்சிப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று ஆதரவு திரட்டினார். அங்கு நடந்த கூட்டத்துக்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தங்கவேல் முன்னிலை வகித்தார்.சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கொண்னையார் ஊராட்சி செயலாளர் துரைசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர் சந்துரு, மாணவரணி துணை அமைப்பாளர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: