- உயர் கல்வித் துறை
- சென்னை
- கல்லூரி கல்வி இயக்குநரகம்
- மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகங்கள்
- அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வி கல்லூரிகள்
சென்னை: உயர்க்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உயர்கல்வித் துறையின் கீழுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் (‘டி’ பிரிவு தவிர்த்து) நலன்கருதி 2026-27ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வு நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த பணியிட மாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்விற்கு விருப்பம் உள்ளவர்கள் www.nonteaching.dcetransfer.in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 24.07.2026 வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
