×

லண்டனில் பட்டம் பெற்ற தனது பேரனை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்: புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல்

சென்னை: லண்டனில் பட்டம் பெற்ற தனது பேரன் இன்பநிதியை கட்டியணைத்து மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. திமுக தலைவர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர் படிப்பை முடித்துள்ளார்.

பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் கடந்த 4ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டனில் 15 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ள அவர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார். இதே போல எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கடந்த 11ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

பேரனின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வரும் 18ம் தேதி சென்னை திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டம் பெற்ற தனது பேரன் இன்பநிதியை, பட்டம் பெற்ற அந்தப் பெருமிதமான தருணத்தில், மு.க.ஸ்டாலின் அவரை கட்டி அணைத்து ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இதைபோல தந்தை உதயநிதி ஸ்டாலினும் மகன் இன்பநிதியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags : MK Stalin ,London ,Chennai ,Inpanithi ,DMK ,Chief Minister ,Opposition Leader ,Udhayanidhi Stalin ,London Manchester… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து