×

சந்தையில் காய்கறி விற்பது போல ரயில் இருக்கைகளை விற்கும் டிடிஇக்கள்: அதிகபட்ச தண்டனை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 

கொல்கத்தா: கடந்த 2009ம் ஆண்டு நியூ ஜல்பைகுரியில் இருந்து சீல்டாவுக்கு செல்ல முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுக்களுடன் தீஸ்தா டோர்சா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய இரண்டு பேர் டிடிஇக்கு பயணம் கொடுத்து இருக்கைகளை பெற்றுக்கொண்டனர். ரயில் பயணத்தின்போது, மர்ம கும்பல் ஒன்று அந்த 2 பேருக்கும் போதைப்பொருள் கொடுத்து அவர்களின் பொருட்களை திருடிச்சென்றனர். போதைப்பொருள் உட்கொண்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் கொலைக்குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், விஷம் மற்றும் போதைப்பொருள் மூலம் காயம் ஏற்படுத்தியதற்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த 2017ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதனை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘பாதிக்கப்பட்டவரின் உடல் உறுப்பு மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. விசாரணை நீதிமன்றத்துக்கு பிணை பத்திரத்தை தாக்கல் செய்தவுடன் மேல்முறையீட்டாளர்களை விடுதலை செய்யப்பட வேண்டும். சிறு திருட்டுக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகக் கடுமையான மருத்துவ விளைவுகளை ஏற்படுத்திய ஆனால் வெளியே தெரியவராத பல சம்பவங்கள் உள்ளன.

இத்தகைய குற்றங்களின் தொடக்கப்புள்ளி டிடிஇக்களின் கைகளிலேயே உள்ளது. .ரயில்களில் காலியாக உள்ள இருக்கைகள், பர்த்துக்களை சந்தையில் காய்கறிகளை விற்பது போல விற்கும் டிடிஇக்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த தீர்ப்பின் நகலைஅனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு அனுப்ப வேண்டும் ” என்று உத்தரவிட்டனர்.

Tags : Kolkata ,New Jalpaiguri ,Sealdah ,TDE ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...