×

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பணியமர்த்தப்பட்ட 50 நாளில் காவல்துறை பயிற்சி பள்ளி இயக்குநராக கூடுதல் டிஜிபி அருண் நியமனம்: உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவு

 

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட 50 நாளில் கூடுதல் டிஜிபி அருணை அதிரடியாக காவல்துறை பயிற்சி பள்ளி இயக்குநராக பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு உள்துறை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த கூடுதல் டிஜிபி அருண் ஊனமஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமி (பயிற்சி பள்ளி) இயக்குநராகவும், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வுப் பிரிவு-1 ஐஜியாக இருந்த மகேஸ்வரி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலின் போது இந்திய தேர்தல் ஆணையம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருணை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது. பின்னர் தவெக அரசு பதவியேற்ற பிறகு கடந்த ேம 25ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக கூடுதல் டிஜிபி அருண் நியமிக்கப்பட்டார். இவர் பதவி வகித்த 50 நாட்களில் தற்போது அவர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். இவரது பணிக்காலத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தி 3 துறை அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத 1 கோடியே 33 லட்சத்து 54 ஆயிரத்து 918 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : DGP ,Arun ,Police Training School ,Anti-Corruption Department ,Manivasan ,Chennai ,Tamil ,Nadu ,Home Secretary ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து