- தமிழ்நாடு அரசு
- நீதிமன்றம்
- டிவிபிஎஸ்
- விஜய் அண்ணா
- சென்னை
- அஇஅதிமுக
- இளைஞர் மற்றும் பெண்கள் முகாம்
- டாக்டர்
- விபிபி பரமசிவம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- டிவிபி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: அ.தி.மு.க.,வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களில் த.வெ.க. நிர்வாகிகள் நுழைந்து தங்கள் கட்சி தலைவர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். தலைவருக்கு ஆதரவாக, விஜய் அண்ணா, விஜய் மாமா என மாணவர்களை வாழ்த்து கோஷங்கள் எழுப்பச் செய்து வருகிறார்கள். தேசிய தலைவர்கள் புகைப்படங்களுடன், த.வெ.க. தலைவர் படத்தையும் காட்சிப்படுத்துமாறு வலியுறுத்துகிறார்கள். கல்வி நிறுவனங்களில் சினிமா பாடல்கள் பாடப்படுகின்றன என சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.
கல்வி நிறுவனங்களை அரசியல் பிரசாரத்துக்காக தவறாகப் பயன்படுத்தி அரசியல் சாசன விதிகளையும், கல்வி உரிமை சட்ட விதிகளையும் மீறி செயல்படுவது குறித்து உடனே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்நிகழ்வுகளை அனுமதிக்கும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில், அரசியல் பிரசாரங்களை தடை செய்து, விதிமுறைகளை வகுக்க வேண்டும். த.வெ.க.வின் இந்த செயல்பாடுகள், பள்ளி, கல்லூரிகளில் கல்வி பயிலும் சூழலுக்கு இடையூறாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரே விஷயத்துக்காக ஏன் வழக்கு மேல் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து கடந்த 10ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
