×

தமிழ்நாடு பாடநூல் தலைவராக தவெக பேச்சாளர் லயோலா மணி நியமனம்

 

சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைப்பில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பாடநூல்களை அச்சிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விநியோகம் செய்து வருகிறது. இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் விலையிலும் வழங்கப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள் உள்ளிட்ட பல்வேறு பாடப் புத்தகங்களை தயாரித்து வழங்கி வருகிறது.

இந்த பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் பேச்சாளர் லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமன ஆணையை முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் நேற்று நேரில் வழங்கினார். அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உடனிருந்தார். லயோலா மணியின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும் எனவும் அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த பொறுப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி இருந்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தற்போது அந்த பொறுப்பில் லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Thaveka ,Loyola Mani ,Tamil Nadu Textbook ,Chennai ,Tamil Nadu Textbook and Educational Services Corporation ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து