×

3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முன்னாள் முதல்வரின் செயலாளராக இருந்த உமாநாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

 

சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த கிருஷ்ணனுண்ணி, சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவச் சேவைகள் துறை இயக்குநராகவும், தொழிலாளர் நலத்துறை ஆணையராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும், சென்னை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறை இயக்குநராக இருந்த அம்ரித் தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வரின் முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்ைம இயக்குராக இருந்த உமாநாத் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags : Former ,Chief Minister ,Umanath ,Chennai ,Chief Secretary ,Saikumar ,Tamil Nadu ,Krishnanunni ,Tamil Nadu Medical Services Corporation ,Animal Husbandry… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து