×

திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

திருப்புத்தூர், மார்ச் 14: சிவகங்கை மாவட்ட எல்லையில் திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பனுக்கு திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானவர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
திருப்புத்தூர் அருகே மாவட்ட எல்லையான பில்லமங்கலம் பகுதியில் முன்னாள் அமைச்சரும், தொடர்ந்து நான்காவது முறையாக திமுக திருப்புத்தூர் சட்டமன்ற வேட்பாளருமான கேஆர்.பெரியகருப்பனுக்கு, திமுகவினர் வெடி வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து திமுகவைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர். பின்னர் வேட்பாளர் பெரியகருப்பன், திறந்த வாகனத்தில் நின்றுகொண்டு பொதுமக்களை சந்தித்தவாறு வந்தார். தொடர்ந்து கீழச்சிவல்பட்டி, விராமதி, சிறுகூடல்பட்டி, நெடுமரம், என்.புதூர், புதுப்பட்டி, திருப்புத்தூர் நான்கு ரோடு, அண்ணாசிலை உள்ளிட்ட பல இடங்களில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானவர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், திருப்புத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், விராமதி மாணிக¢கம், ஒன்றிய துணை செயலாளர் இளங்கோவன் மற்றும் திமுக மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழகம், சார்பு அணியினர், மகளிர் அணியினர் உள்ளிட்ட மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.


Tags : DMK ,Tiruputhur ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு