×

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா..? – உமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அல்லது வெள்ளை மாளிகையை அணுகினால் தான் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்குமா என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஒன்றிய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

ஜம்முவில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் பேசிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, “நமது சொந்த நாட்டின் தலைநகரில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கவில்லை என்றால், நாங்கள் வெள்ளை மாளிகையில் உள்ள டிரம்ப்பிடமா செல்ல வேண்டும்.!!” என்று கேள்வி எழுப்பி பா.ஜ.க அரசை கிண்டல் செய்து உள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோடி அதன் முதல்வர் உமர் அப்துல்லா டெல்லியில் ஒரு பெரிய போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி, அவரது கட்சியான நேஷனல் கான்பரன்ஸ் (NC) இந்த போராட்டத்தை நடத்தவுள்ளது. புது டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான வரும் ஜூலை 20-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் போராட முடிவு செய்திருப்பது நியாயமே என்று குறிப்பிட்டுள்ள அவர், ஒன்றிய அரசுக்கு நாங்கள் போதுமான நேரம் கொடுத்துவிட்டோம். மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க பேச்சுவார்த்தை நடத்தினோம், ஆனால் பலனில்லை. எனவே, இனி போராட்டக் களத்தில் இறங்குவோம் என்று உமர் அப்துல்லா உறுதிபட கூறியுள்ளார்.

Tags : Trump ,Jammu and ,Kashmir ,Omar Abdullah ,Jammu ,Jammu and Kashmir ,Chief Minister ,Union government ,US ,President ,Donald Trump ,White House ,Jammu… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...