×

வயநாடு மண் சரிவில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

திருவனந்தபுரம்: வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்ற இடத்தில் கடந்த 7ம் தேதி திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர். இதுகுறித்து அறிந்ததும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மண் சரிவில் 8 தொழிலாளர்களை காணவில்லை என்று சுரங்கப்பாதை கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்தனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் முதல் நாளில் 3 உடல்கள் கிடைத்தன. பின்னர் 4 உடல்கள் மீட்கப்பட்டன.

சுரங்கப்பாதை கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த விக்ரம் ராணா என்பவரின் உடல் மட்டும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் நேற்று மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இது விக்ரம் ராணாவின் உடலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி ஆற்றின் கரையில் இருந்து இந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டது. 6 நாட்கள் மண்ணுக்கு அடியில் இருந்ததால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

Tags : Wayanad ,Thiruvananthapuram ,Kalladi ,Meppadi ,Wayanad district ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...