×

வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெற விசிக வலியுறுத்தல்

சென்னை : விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘வந்தே மாதரம்’- பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட வேண்டுமென்று இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்தச் சுற்றறிக்கை இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்தானது மட்டுமல்ல; மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதுமாகும்.

எனவே, இந்த சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இந்தியாவின் தேசிய கீதமாக ‘ஜன கண மன’ பாடல் இருப்பதா? ‘வந்தே மாதரம்’ பாடல் இருப்பதா? என்ற விவாதம் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே எழுப்பப்பட்டது. விரிவான வாதங்களுக்குப் பிறகே, ‘ஜன கண மன’ என்னும் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக தேர்வு செய்யப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளாக அதுவே பாடப்பட்டு வருகிறது.

இப்போது பாஜக அரசு, ஆர் எஸ் எஸ் அமைப்பின் தூண்டுதலால் ‘வந்தே மாதரம்’ பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது. மதச்சார்பின்மைக்கு மாறான – ஒரு குறிப்பிட்ட மதசார்புள்ள பாடலான வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டுமென்றும்; ஒன்றிய பாஜக அரசின் இந்த மதவாத அரசியல் செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசும் ஏற்கக்கூடாது

Tags : Vic ,Vande Mataram ,Chennai ,Ministry of Interior of the Government of India ,Chief Secretaries of State ,Liberation Leopard Party ,Thirumavalavan ,Ministry of the Interior ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து