×

கொங்கு மண்டலத்தில் அதிமுக டெபாசிட் இழக்கும் பையா ஆர்.கிருஷ்ணன் பேட்டி

கோவை, மார்ச். 13: சென்னை அறிவாலயத்தில் திமுக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், பங்கேற்று விமானம் மூலம் கோவை திரும்பிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் எனக்கு கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்துள்ளார். இத்தொகுதியில் வெற்றி பெற்று, தலைவருக்கு வெற்றி கனியை அளிக்கவுள்ளேன். கொங்கு மண்டலத்தில் அதிமுக டெபாசிட் இழக்கும். திமுக வசமாகும். தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்” என்றார்.

Tags : Piya R. Krishnan ,AIADMK ,Kongu ,
× RELATED கொங்கு மண்ணை ஆண்ட.மாவீரன் தீரன்...