×

மணிப்பூரில் மீண்டும் வன்முறை 600 பேர் தடுத்து நிறுத்தம்

இம்பால்: மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் காண்டோ சபல் பகுதியில் உள்ள குடியிருப்பு நோக்கி காங்போக்பியில் இருந்து சுமார் 600 பேர் கொண்ட கும்பல் முன்னேற முயன்றது. மேலும் அங்குள்ள மூன்று வீடுகளுக்கு தீயிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவான நிலையில் அங்கிருந்த பாதுகாப்பு படையினர் அவர்களை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

கூட்டத்தை கலைப்பதற்கு கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு திரண்ட கும்பல் கலைந்து சென்றது. இதன் காரணமாக அங்கு இரு சமூகத்தினரிடையே ஏற்பட இருந்த மோதல் முறியடிக்கப்பட்டது. கைவிடப்பட்ட வீடுகளுக்கு தீ வைப்பதற்கு சமூகவிரோதிகள் மேற்கொண்ட முயற்சிகளும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டன.

Tags : Manipur ,Imphal ,Kangboqbi ,Kando Sabal ,Impal West district ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...