மதுரை மாவட்டத்தில் 3 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்

மதுரை, மார்ச் 13: மதுரை மாவட்டத்தில் முதல் நாளில் 3 பேர் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், முதல் நாளான நேற்று, மேலூர் தொகுதியில் சாம்பிராணிபட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (45), அதேபோன்று மதுரை வடக்கு தொகுதியில் கரும்பாலையை சேர்ந்த பொறியாளர் மணிகண்டன். திருமங்கலம் தொகுதியில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராசன்பாபு ஆகிய 3 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சுயேட்சையாக  மனு தாக்கல் செய்துள்ளனர்.  

மாவட்டத்தில் மற்ற 7 தொகுதியில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

Related Stories:

>