கரூர் அட்லஸ் கலையரங்க மைதானத்தில் நேற்று நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசுகையில்,‘‘என் நெஞ்சியில் குடியிருக்கும் கரூர் சொந்தங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். ஒரு மனிதன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்துக்கு போனாலும் மனசு அளவில் சில வலிகள், காயங்களை மறக்க முடியாது. ஆனா, எல்லாத்தையும் விட ரொம்ப ஜாஸ்தியான அந்த வலியும், அந்த காயமும் எனக்கு வந்தது அந்த கரூர் சம்பவம் தான். அரியலூர்ல அந்த மீட்டிங் முடிச்சுட்டு பெரம்பலூர் போறதுக்கு முன்னாடி, அந்த பெரம்பலூர் போலீஸ் வந்து எங்களை அலர்ட் பண்ணுணாங்க.
சரிங்க, கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு, லேட் ஆயிடுச்சு, வராதீங்க அப்படின்னு. அதனால எங்களுக்கு வேற வழியில்லை. போலீஸ் சொன்னா நம்ம அதை ஓபே பண்ணித்தானே ஆகணும். அதே நேரத்துல பெரம்பலூர் மக்களோட அந்த சேப்டியும் மைண்ட்ல வச்சுக்கிட்டு, ஒரு மன வலியோடவே திரும்ப போயிட்டோம். அதுக்கப்புறம் பெரம்பலூர் தொகுதி மக்களிடம் மன்னிப்பும் கேட்டோம். அதேமாதிரி, நாமக்கல்லல அந்த மீட்டிங் முடிச்சுட்டு கரூர் வரும்போது, அந்த கரூர் போலீஸ் எங்களை அலர்ட் பண்ணிருக்கலாம்ல?
இங்க எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கு, கண்ட்ரோல் பண்ண முடியல, வராதீங்க. அப்படின்னு. போலீஸ் நினைச்சா, அவங்க அந்த மீட்டிங்கையே கேன்சல் பண்ணலாம். ஏதோ தப்பா இருக்கு, ஏதோ தப்பா தோணுது அப்படின்னு நினைச்சுட்டாலே, மீட்டிங்கை கேன்கல் பண்ண அவங்களுக்கு உரிமை இருக்கு. எங்ககிட்ட கேட்கணும்னுலாம் ஒன்னும் அவசியமே கிடையாது. ஆனால், அதையெல்லாம் எதுவுமே செய்யாம, அந்த ஹைவேல இருந்த அந்த ஸ்பாட்டுக்கு போலீஸே எங்களை உள்ள கூட்டிக்கிட்டு வந்து விட்ட அந்த நாடகங்கள் இருக்கு பாருங்க…
நம்பிட்டேங்க, முழுசாக நம்பிட்டேன். அன்னைக்கு இருந்த அந்த கரூர் போலீஸ். பேசும்போது தேங்க்ஸ்லாம் சொன்னேன் அவங்களுக்கு. மக்களே, என் மனசை விட்டு கரூர் எப்பவும் நீங்கவே நீங்காது. கரூர்ல ஒரு நினைவு சின்னத்தை நம்ம டிவிகே சார்பாக அமைக்கப்படும் அப்படின்றதை அறிவிக்கிறோம். சென்ட்ரல் கவர்மெண்ட்ல இருந்து அந்த டீலிமிட்டேஷனை திரும்ப கொண்டு வரப்போறதா ஒரு பேச்சு ஒன்னு அடிபடுது. யார் என்ன டீலிமிட்டேஷன் கொண்டு வந்தாலும் தமிழ்நாடு அதை ஒத்துக்கவே ஒத்துக்காது. நமக்கான இடத்தை யாரும் பறிக்கவும் முடியாது, அதை பறிக்கவும் விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
