×

டாஸ்மாக் பார் ஒப்பந்ததாரர்களுக்கு மேலும் 2 மாதம் ஒப்பந்தம் நீட்டிப்பு: நிர்வாக இயக்குநர் சுற்றறிக்கை

சென்னை: டாஸ்மாக் பார் ஒப்பந்ததாரர்களுக்கு மேலும் 2 மாதம் ஒப்பந்தம் நீட்டிப்பு செய்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே.நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே.நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: கடந்த 6ம் தேதி 223வது இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 38 மாவட்ட மேலாளர்களுக்கும், தற்போது நடைமுறையில் உள்ள பார் ஒப்பந்தங்களை தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள், தற்போதுள்ள ஒப்பந்ததாரர்களுடன் எந்தவித புதிய நிபந்தனைகளும் விதிக்காமல், ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஒப்பந்தங்களை 2 மாதங்களுக்கு நீட்டித்து உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த உத்தரவின் மூலம், புதிய ஒப்பந்ததாரர்களை நியமிக்கும் நடைமுறை நிறைவடையும் வரை, தற்போது செயல்பட்டு வரும் பார் ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து பணியாற்ற வழிவகுக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் பார்களின் அன்றாட செயல்பாடுகள் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : TASMAC ,Chennai ,Managing Director ,K. Nandakumar ,223rd Board of Directors ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து