×

பர்கூர் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 13: பர்கூர் தாசில்தார் அலுவலகத்தில், பர்கூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலட்சுமி தலைமை வகித்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சண்முகம், குமரவேல், தனி தாசில்தார் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பேசுகையில், ‘80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்குகள் அளிக்கலாம். அவர்களை கட்டாயப்படுத்த கூடாது. தபால் வாக்குகள் அளிக்க விருப்பமுள்ளவர்களுக்கு 12டி படிவம் வழங்க செல்லும் வாக்குச்சாவடி அலுவலர்கள், கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும்,’ என்றார்.

Tags : Bargur ,Taluka ,Office ,
× RELATED தாசில்தார், துணை தாசில்தார் விசாரணைக்கு ஆஜராக ஆட்சியர் உத்தரவு