புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை ரோகினி பகுதியில், கட்டுமான பணியில் இருந்த 3 மாடி அடுக்கு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில், ஏராளமானோர் சிக்கி அலறி துடித்தனர். தகவலறிந்து மீட்பு குழுவினர், தீயணைப்படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை சடலமாக தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். மேலும் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்திற்கு மோசமான வானிலைதான் காரணமா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
