×

கஞ்சா விற்ற அதிமுக நிர்வாகி மகன் கைது

சேலம்: சேலம் இரும்பாலை பெருமாம்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், பெருமாம்பட்டி ஏரிக்காட்டை சேர்ந்த வீரபாண்டி மேற்கு ஒன்றிய அதிமுக விவசாய அணி செயலாளர் நாகராஜின் மகன் புவனேஸ்வரன் (29) என்பது தெரியவந்தது.

நாகராஜ் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் மூடுதுறை பஞ்சாயத்து நாயக்கன்பட்டி ஒன்றிய கவுன்சிலராக இருந்துள்ளார். கைதான புவனேஸ்வரன், பிடெக் படித்துள்ளார். கடந்த 6 மாதமாக கஞ்சா விற்பனை செய்து வருவதாகவும், தர்மபுரியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : Salem ,Salem Railroad ,Veerapandi West Union Adimuga Farming Team ,Perumambati Erikat ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை