×

மணிமுத்தாறு அரசு பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் இருக்கைகள்

அம்பை, மார்ச் 12: மணிமுத்தாறு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அம்பை ரோட்டரி கிளப் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவிகள் அமருவதற்கான இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி ஆசிரியர் சாரதா வரவேற்றார். அம்பை ரோட்டரி சங்க தலைவரும், பரமகல்யாணி கல்லூரி பேராசிரியருமான விஸ்வநாதன் தலைமை வகித்தார். மயில் பாலசுப்பிரமணியன், டாக்டர் கோபாலகிருஷ்ணன், சங்கரநாராயணன், சிவசுப்பிரமணியன், சுடலையாண்டி  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ரோட்டரி மாவட்ட கவர்னர் சேக் சலீம் சிறப்புரை ஆற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார் ஏற்புரையாற்றினார். சிவசங்கரன் மாணவர்களுக்கு திருக்குறளின் விளக்க உரை ஆற்றினார். பாலசுப்பிரமணியன் பகவத்கீதையின் நன்மைகளை எடுத்துரைத்தார். மணிமுத்தாறு அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவரும், வழக்கறிஞருமான ரமேஷ், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அம்பை ரோட்டரி கிளப் செயலாளர் பூங்குன்றன் நன்றி கூறினார்.

Tags : Manimuttaru Government School ,
× RELATED டாக்டர்களிடம் ரகளை செய்த வாலிபர் ஊழியர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு