×

கேரள அரசின் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூ.30 கோடி

திருவனந்தபுரம்: கேரள அரசின் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு லாட்டரியில் வழங்கப்படும் பரிசுத் தொகையில் இதுதான் மிக அதிகமான தொகை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கேரளாவில் அரசு லாட்டரிகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது.

ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்பட பண்டிகை நாட்களில் பம்பர் லாட்டரி குலுக்கல் நடத்தப்படுகிறது. கடந்த சில வருடங்களாக ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 25 கோடியாக இருந்தது. ஒரு டிக்கெட் ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ரூ. 30 கோடியாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு டிக்கெட்டின் விலை கடந்த வருடத்தைப் போலவே ரூ. 500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசு 20 பேருக்கு தலா ரூ.1 கோடியும், மூன்றாவது பரிசு தலா ரூ.25 லட்சம் 20 பேருக்கும் கிடைக்கும். வரும் 17ம் தேதி கேரள முதல்வர் வி.டி. சதீசன் இவ்வருட ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் விற்பனையை தொடங்கி வைக்கிறார். இவ்வருடம் 90 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala government ,Onam ,Thiruvananthapuram ,Onam bumper lottery ,India ,Kerala… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...