×

ரூ.6 ஆயிரம் கோடி மோசடி மகாதேவ் செயலி உரிமையாளர் ஓமனில் கைது: இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி

புதுடெல்லி: மகாதேவ் பந்தய செயலியானது ஒரு பெரிய அளவிலான சர்வதேச பந்தயக் கூட்டமைப்பாகச் செயல்பட்டது. இது ‘டைகர் எக்ஸ்சேஞ்ச்’, ‘கோல்டு365’ மற்றும் ‘லேசர் 247’ போன்ற பல்வேறு இணையதளத் தளங்கள் மற்றும் டொமைன் பெயர்கள் மூலம் சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியா முழுவதும் இந்த செயலி மூலம் ரூ.6000 கோடி மதிப்பில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் செய்யப்பட்டது.

அதேவேளையில், இதன் முக்கிய உரிமையாளர்களான சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் உப்பல் ஆகியோர் துபாயில் இருந்தபடியே இந்த செயலியை நிர்வகித்து வந்தனர். இதை அறிந்த அமலாக்கத்துறை அதிரடியாக வழக்குப்பதிவு செய்து 13 பேரை கைது செய்துள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிட சொத்து உள்பட ரூ.1700 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது.

மேலும் ராய்ப்பூரில் (சட்டீஸ்கர்) உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 குற்றப்பத்திரிகைகளில் மொத்தம் 74 நிறுவனங்கள் மற்றும் நபர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மகாதேவ் பந்தய செயலியின் உரிமையாளர் சவுரப் சந்திரகர் சில வாரங்களுக்கு முன்பு ராயல் ஓமன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரை இந்தியா கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

 

Tags : Oman ,India ,New Delhi ,Tiger Exchange ,Gold365 ,Laser 247'.… ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...