×

ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை சார்பில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு வாகன பேரணி

ஈரோடு, மார்ச் 12: ஈரோடு அபிராமி கிட்னி கேர், டாக்டர் தங்கவேலு மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம், செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக சிறுநீரக தின கருத்தரங்கம் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் நடந்தது.
அபிராமி கிட்னி கேர் சேர்மேன் டாக்டர் தங்கவேலு வரவேற்றார். இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் டாக்டர் ராஜா, ஈரோடு கிளை தலைவர் டாக்டர் பிரசாத், சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சிறுநீரக செயலிழப்பு குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சரவணன் பேசினார். முடிவில் டாக்டர் பூர்ணிமா சரவணன் நன்றி கூறினார். முன்னதாக, உலக சிறுநீரக தின விழிப்புணர்வு வாகன பேரணி கரூர் அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் துவங்கி ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதுகுறித்து அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சரவணன் கூறியதாவது: ஈரோடு அபிராமி கிட்னி கேர் மற்றும் கரூரில் உள்ள எங்களது மருத்துவமனையிலும் தினசரி 2,500 பேருக்கு மேல் சிறுநீரக பாதிப்புள்ளவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதில், தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : World Kidney Day Awareness Vehicle Rally ,Abirami Kidney Care Hospital ,Erode ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா