×

தலைவர் சொன்னதுக்கு நான் கோனார் உரை எழுத முடியாது ஊடகங்களோட டைட்டில் கார்டை வச்சு கேள்வி கேட்காதீங்க ப்ளீஸ்.. அமைச்சர் வன்னியரசு காட்டம்

சென்னை: தலைவர் கூறியதற்கு நான் கோனார் உரை எழுத முடியாது. ஊடகங்களின் டைட்டில் கார்டு வைத்து தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார். இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள் விழாவையொட்டி ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அமைச்சர் வன்னி அரசு நேற்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் அளித்த பேட்டி:

இரட்டை மலை சீனிவாசன் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில் தலித் மக்களின் விடுதலைக்காக போராடியவர். அம்பேத்கரை தலைவராக ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் அதற்காக தனித்துவமாக களமாடியவர். விசிக சார்பில் இரட்டை மலை சீனிவாசனின் பிறந்தநாளை போற்றும் வகையில் மரியாதை செலுத்தியுள்ளோம். எங்களின் தலைவர் கூட்டணி பற்றி தெளிவாக கூறிவிட்டார்.

தலைவரின் உரைக்கு, நான் கோனார் உரை எழுத முடியாது. ஊடகங்களில் டைட்டில் கார்டு போடுவதை மட்டும் வைத்து தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம். தமிழக அமைச்சரவையில் பங்கெடுத்ததற்கு காரணம் என்ன? திமுக கூட்டணியில் ஏன் இல்லை என்பதையும் விசிக தலைவர் திருமாவளவன் ஏற்கனவே எளிமையாக தெளிவுப்படுத்தி விட்டார். அதை மீண்டும் ஒருமுறை நீங்கள் கேளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Vanniyarasu ,Chennai ,Twin Mountain ,Srinivasan ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து