×

அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் திமுக எம்.பி. சல்மா புகார்

 

சென்னை: அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் திமுக எம்.பி. சல்மா புகார் அளித்துள்ளார். அரசுப் பள்ளிக் குழந்தைகளை பலர் முன்னிலையில் அமைச்சர் கீர்த்தனா அவமானப்படுத்தியதாக சல்மா புகார் அளித்துள்ளார். குழந்தையின் அடிப்படை உரிமையை மீறும் வகையில் குழந்தையின் அடையாளத்தை வெளிபடுத்தியுள்ளார் . குழந்தை அடையாளத்தை வெளிப்படுத்தி குழந்தைகளின் பாதுகாப்பு சட்டத்தை மீறியுள்ளார். அவமானப்படுத்தப்பட்ட குழந்தையின் அடையாளத்தை மறைக்காமல் சமூக ஊடகங்களில் வீடியோ பரப்பப்பட்டுள்ளது. குழந்தையின் அடிப்படை உரிமையை மீறியுள்ள அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : DMK ,Salma ,National Child Protection Commission ,Minister Keerthana ,Chennai ,Minister ,Keerthana ,
× RELATED செங்கல்பட்டு மதுரவாயல் அருகே 129 சவரன் நகை திருட்டு வழக்கில் 5 பேர் கைது