×

ஒட்டன்சத்திரத்தில் வாக்கு மையங்களில் எஸ்பி ஆய்வு


ஒட்டன்சத்திரம், மார்ச் 12: ஒட்டன்சத்திரத்தில் வட்டாட்சியர் அலுவலகம், கே.ஆர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதனை எஸ்பி ரவளிப்பிரியா நேரில் ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு வந்து செல்ல சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி அசோகன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Ottanchattaram ,
× RELATED தூய்மை நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்வு: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்