×

மே.வங்க பாடப் புத்தகங்களில் சியாமா பிரசாத் முகர்ஜி குறித்த பாடம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக தக்க வைப்பதற்கு முக்கிய பங்காற்றியவர் சியாமா பிரசாத் முகர்ஜி. பாஜவின் கொள்கை வழிகாட்டியும் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி அவர் படித்த மித்ரா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சுவேந்து அதிகாரி கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர், ‘‘அடுத்த கல்வியாண்டு முதல் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜியின் மேற்கு வங்க உருவாக்க பங்களிப்பு, தேசபக்தி குறித்து பாடப்புத்தகங்களில் இடம்பெறும்” என்றார்.

Tags : Syama Prasad Mukherjee ,West Bengal ,Kolkata ,India ,BJP ,Bharatiya Jana Sangh ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...