புதுடெல்லி: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் குட்மா ரயில் நிலையத்தில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பணியில் இருந்த பாயிண்ட்ஸ்மேன் அபிலாஷ் யாதவ் மீது ஜூலை ஒன்றாம் தேதி டாடா நகர் எக்ஸ் ரயில் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து 12மணி நேர பணிமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆல் இந்தியா பாயிண்ட்ஸ்மென் சங்க செயலாளர் சாய் பிரசாத் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘ ஆபத்தான மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் களப்பணியாளர்கள் தங்கள் உடல் திறனுக்கு அப்பாற்பட்டு வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதால் ஒரு உயிர் பறிபோனது. அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் உள்ள 12 மணி நேர அத்தியாவசிய இடைப்பட்ட பணி அட்டவணையை உடனடியாக எட்டு மணி நேர ஷிப்ட் முறையாக மாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
