×

எனது ஆலோசனையை கேட்டால் யாரையும் சேர்க்கத் தேவையில்லை: விஜய்க்கு, கார்த்தி சிதம்பரம் எம்பி ஐடியா

அவனியாபுரம்: சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பதவி ஏற்றுள்ள புதிய அரசுக்கு, போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். பெரும்பாலான அமைச்சர்கள் முதல்முறை பொறுப்பேற்றுள்ளதால், நிர்வாகத்தினை புரிந்துகொள்ள அவகாசம் தேவை. முதல் பட்ஜெட்டுக்குப் பிறகே, அரசின் செயல்திட்டம் குறித்து முழுமையாக மதிப்பிட முடியும்.

என்னுடைய ஆலோசனையை கேட்டால், ஐந்து வருடங்களுக்கு விஜய் தலைமையில் ஆட்சி நடக்கும். அவர்கள் யாரையும் சேர்க்கத் தேவையில்லை. எனது கட்சியிலேயே என் ஆலோசனைகளை யாரும் கேட்க மாட்டார்கள். அடுத்த கட்சியினரா கேட்கப்போகிறார்கள். அதிமுக தலைமை மீது நம்பிக்கை இல்லாமல், அக்கட்சியினர் தவெகவிற்கு வருகிறார்கள். ஆனால் அதிமுக இருக்க வேண்டும், அந்த கட்சி அழிவது, தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்கு சரியல்ல. இவ்வாறு கூறினார்.

Tags : Karthi Chidambaram ,Vijay ,Avaniyapuram ,Sivaganga ,Madurai airport ,Tamil Nadu ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து