×

கஞ்சா போதை கும்பல் கருங்கல்லை கொண்டு தாக்கியதில் இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருவண்ணாமலையில் கஞ்சா போதை கும்பல் கருங்கல்லை கொண்டு தாக்கியதில் ரஞ்சித் (26) என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக மோகன் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து ரஞ்சித்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். மோகன், சந்துரு ஆகியோர் கைதான நிலையில், தப்பியோடிய மேலும் இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Ranjit ,Tiruvannamalai ,Mohan ,Chanduru ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை