×

டாஸ்மாக் பார் ஊழியர் அடித்துக்கொலை: கேஷியர் கைது

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பெருமாநல்லூரில் உள்ள டாஸ்மாக் மது பாரில் புதுக்கோட்டை மாவட்டம் கடையாமங்கலம் வேலுச்சாமி (59) மாஸ்டராகவும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அன்பழகன் (25) கேஷியராகவும் இருந்தனர். கடந்த 25ம் தேதி இருவரும் மது குடித்தனர். போதையில் ஏற்பட்ட வாக்குவாத்தில் இருவரும் தாக்கிக்கொண்டனர். பின்னர் இருவரும் வேலையை விட்டு சொந்த ஊருக்கு சென்றனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி வேலுச்சாமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் வயிற்று பகுதியில் தாக்குதல் காரணமாக குடல்வால்வு பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வேலுச்சாமி உயிரிழந்தார். புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த அன்பழகனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Tasmac ,Avinashi ,Veluchamy ,Pudukkottai district ,Tasmac liquor bar ,Perumanallur ,Tiruppur district ,Thiruvadanai Anbazhagan ,Ramanathapuram district ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை