×

சோபா வந்தவுடன் சிலர் சென்றுவிட்டார்கள்; சிறுபான்மையினரின் காவல் அரணாக திமுக நிற்கும்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத அரசாக உள்ளது தவெக அரசு என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைமை நிலையச் செயலர் துறைமுகம் காஜா இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர்; தற்போது தமிழ்நாட்டில் நடந்திருப்பது அரசியல் பேரிடர். தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத அரசாக தவெக அரசு உள்ளது. அரசியல் பேரிடரில் இருந்து தமிழ்நாட்டை திமுகவும், திமுக தலைவரும் மீட்பார்கள்.

திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையேயான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது. சோஃபா வந்தவுடன் சிலர் நம்மைவிட்டு சென்றுவிட்டார்கள், இஸ்லாமியர்கள் எங்களுடன் இருக்கிறீர்கள். யார் என்ன பேசினாலும், எந்த அவதூறுகளை பரப்பினாலும் சிறுபான்மை மக்களின் காவல் அரணாக திமுக நிற்கும் என்று கூறினார்.

Tags : timuka ,Udayaniti Stalin ,Chennai ,Udayanidhi Stalin ,Tamil Nadu ,Assistant Secretary General ,Dimuka Headquarters ,Port Gaja Illa ,
× RELATED மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு...