×

ரயில் முன்பதிவு டிக்கெட் வாங்கி தருவதாக வடமாநில வாலிபரை கடத்தி ரூ.3000, செல்போன் பறிப்பு

பெரம்பூர்: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (24). இவர் கட்டிட மேஸ்திரி. பீகாரை சேர்ந்தவர். நேற்று பீகார் செல்வதற்காக பெரம்பூர் ரயில் நிலையம் வந்து காத்திருந்துள்ளார். அப்போது இருவர் வந்து அசோக்குமாரிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

அப்போது அவர்கள், ‘’ஊருக்கு செல்வதற்காக முன்பதிவு டிக்கெட் வாங்கித் தருகிறோம்’ என்று கூறி ஆட்டோ மூலம் செம்பியம் தீட்டிதோட்டம் முதல் தெரு பகுதிக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் அவரை மிரட்டி 3 ஆயிரம் ரூபாய் மற்றும் செல்போனை பறித்து சென்றுவிட்டனர். இதுபற்றி அசோக்குமார் திருவிக. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : northern state ,Perampur ,Asokumar ,Nungambakkam ,Chennai ,Bihar ,Perambur ,train station ,Ashokumar ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை