×

வாகனங்களின் மைலேஜ் திறனை பாதிக்கும் இ-20 எரிபொருள் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத ஆம் ஆத்மி முடிவு

புதுடெல்லி: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் தன் எக்ஸ் பதிவில், “இ-20 எரிபொருள் திட்டம் ஒரு சோதனை முயற்சி. இந்த சோதனைகளின் முடிவுகளை பொறுத்தே அதன் எதிர்கால நடவடிக்கைகள் அமையும் என்று அட்டர்னி ஜெனரல் மூலமாக கடந்த 30ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இ-20 எரிபொருள் தொடர்பான சோதனைகள் பெரிய அளவில் செயல்படுத்தப்படுகிறது. அதற்குமுன், குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களில் முதலில் நடத்தப்பட வேண்டும்.

எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் வாகனங்களின் மைலேஜ் பாதிக்கப்படுகிறது. வாகனங்கள் சேதமடைகிறது என மக்களிடையே கவலைகள் எழுந்துள்ளன. அவ்வாறு சேதமடையும் வாகன உரிமையாளர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குமா? எனவே இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இ-20 எரிபொருள் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Tags : MODI ,NEW DELHI ,Arvind Kejriwal ,Attorney General ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...