×

ஜூலை 12முதல் ஆக.4 வரை விக்ரம் -1 ராக்கெட் சோதனை பயணம்: ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் அறிவிப்பு

புதுடெல்லி: ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் முன்னணி விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனமானது விக்ரம் -எஸ் வெற்றியை தொடர்ந்து முழு அளவிலான சுற்றுப்பாதை ராக்கெட்டான விக்ரம் -1 ஐ உருவாக்கி உள்ளது.

இதனை தொடர்ந்து விக்ரம்-1ன் முதல் சோதனை பயணத்தை மேற்கொள்வதற்கான காலக்கெடு ஜூலை 12ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஏவுதளத்தில் மேற்கொள்ளப்படும் பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைப் பணிகள் நிறைவடைதல், அத்துடன் வானிலை, பாதுகாப்பு மற்றும் ஏவுதலுக்கான அனுமதி ஆகியவற்றை பொறுத்தே ஏவுதலுக்கான இறுதித் தேதி அமையும் .

Tags : Skyroot Aerospace ,New Delhi ,Vikram ,India ,Hyderabad ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...