×

தவெக குதிரை பேரம் நடத்தி இழுத்த அதிமுகவின் 6 பேரவை தொகுதிகளையும் காலியானதாக அறிவித்து இடைத்தேர்தல் நடத்தக் கூடாது: தலைமை தேர்தல் ஆணையத்தில் எம்பி இன்பதுரை புகார் மனு

சென்னை: தமிழ்நாடு சட்டபேரவை தேர்தலில் அதிமுக தரப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், எஸ்.ஜெயக்குமார், பி.சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். இவர்கள் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தவெக குதிரை பேர ஊழலுக்கு எதிராக தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுகவை சார்ந்த எம்பி இன்பதுரை நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததும், அவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டதும் சட்டத்திற்கு புறம்பானதாகும்.

எனவே சர்ச்சைக்குரிய ஆறு தொகுதிகளிலும் மீண்டும் தேர்தல் நடத்தக் கூடாது. இந்த எம்எல்ஏக்கள் மீது தனியாக தேர்தல் ஆணையம் ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் ஆறு சட்டமன்ற தொகுதிகளையும் காலியானதாக அறிவிக்க கூடாது. அதேபோன்று அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தக் கூடாது என மனுவில் வலியுறுத்தி தெரிவித்துள்ளார். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,Thaveka party ,Inpadurai ,Chief Election Commission ,Chennai ,Maragatham Kumaravel ,S. Jayakumar ,P. Sathiyabhama ,Isakki Subbaiah ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து