×

கல்வி, வேலைவாய்ப்பு தேவைகளுக்கு ஏற்ப இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்த வேண்டும்: அமைச்சரிடம் நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் ஐ.அன்சாரி தலைமையில் நிர்வாகிகள் காஞ்சி சித்திக், அப்துஸ் மஸமது ஆகியோர் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹானை நேற்று நேரில் சந்தித்து பேசினர். அப்போது கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள இஸ்லாமியர்களுக்கான 3.5% தனி இடஒதுக்கீடு, தற்போதைய மக்கள் தொகை மற்றும் கல்வி, வேலைவாய்ப்பு தேவைகளுக்கு ஏற்ப 7% ஆக உயர்த்த வேண்டும். முதல்கட்டமாக 5% உயர்த்த வேண்டும். உலமா நலவாரியத்தில் எளிதில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன.

Tags : Chennai ,Tamil Nadu ,Thowheed Jamaat ,State ,I. Ansari ,Kanchi Siddique ,Abdus Masamad ,Minority Welfare Minister ,A.M. Shahjahan ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து